Phone: +91 9655219245 | Free shipping for orders above Rs.500

ஜடேரி சென்ற காரணம் என்ன?

1. உண்மை கள நிலவரம் அறிதல்
2. ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்
3. உள்ளூரிலேயே பயிற்சியாளர்களைக் கண்டறிதல்
4. காஞ்சி, செய்யாறில் உள்ள அடியார்களைக்கொண்டு நீண்ட கால திட்டங்களுக்கு வழிவகுத்தல்
5. ஆச்சாரியர்களின் திருவடி பட்டால் தீமைகள் விலகி அந்த ஊரே செழிப்படையும் என்று நாங்கள் நிச்சயம் நம்புவதால்,
ஸ்ரீ அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி முதலிய ஆச்சார்யர்களின் அருளாசிகளை அந்த ஊர் மக்கள் பெற வழிவகை செய்தல்
6. தீய எண்ணங்களை ஒழித்து ஸாத்வீக (நல்ல) குணங்களை வளர்க்க, தீபாவளிக்கு பெருமாளுக்கு நைவேத்யம் செய்த பிரசாதம் (கொஞ்சம்) வழங்குதல்
7. குழந்தைகளுக்கு ஆன்மீக புத்தங்கள் விநியோகம் செய்தல்; விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; திருமண் தயாரிப்பது எவ்வ்ளவு பெரிய தொண்டு என்று அவர்களுக்கு விளக்கிச்சொல்லுதல்.

செய்ய வேண்டியவை என்ன?

1. தொழில் முறையில் நாம் (திருமண் இட்டுக்கொள்பவர்கள்) அவர்களின் நேரடி வாடிக்கையாளர்கள். அவர்களின் நாமக்கட்டிகளை (திருமண்) நேரடியாக வாங்கி அவர்களுக்கு அதிக லாபம் ஈட்டுதல். இதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டோம். ஆன்மீகப்பெரியோர்களின் சம்மதம்/ஆசீர்வாதம் பெற்ற பின், இணையத்தில் நேரடியாக நீங்கள் “ஜடேரி திருமண்” வாங்கலாம்.

Update : ஜடேரி திருமண் கட்டியை onlineல் பெற http://pracharam.in/products தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஐப்பசி திருமூலம் ஆன (11 Nov 2018) ஸ்வாமி மணவாள மாமுனிகளின் அவதார தினத்தில் இந்த நல்ல காரியம் தொடங்கும்.

2. ஆன்மீகக்கல்வி சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்த முயற்சிகளை மேற்கொள்ளல். ஜடேரி மட்டுமல்லாது எல்லா ஊர்களிலும் இதற்கு தேவை இருக்கிறது. இந்த இரண்டு செயல்களுமே மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.

3. உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்படுதல். அந்த ஊர் மக்களுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்தல்.

செய்யக்கூடாதவை என்ன?

1. வெளியூரில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு அறியாமையால், இலவசப் பொருட்களை அதிகப்படியாக வழங்கக்கூடாது
2. எல்லோரும் திடீரென்று நேரில் சென்று அந்த ஊர் மக்களிடையே (அருமையான மக்கள்) ஒரு பீதியை உண்டாக்கி விடக்கூடாது
3.இணையத்தில் படிப்பவை எல்லாவற்றையும் அபப்டியே நம்பி விடக்கூடாது (இந்தக் கட்டுரைக்கும் பொருந்தும்)
4. இதையெல்லாம் சொன்னதற்காக அடியேனை கோபித்துக்கொள்ளக்கூடாது 🙂 யதார்த்தவாதி பகுஜன விரோதி !

இதற்கும் அதிகப்படியான விவரங்கள் (தேவைப்படாது) வேண்டுபவர்கள். தனிப்பட்ட முறையில் நாம் விவாதிக்கலாம். பொறுமையுடனும் எளிமையுடனும் இன்முகத்தோடும் ஜடேரிக்கு எழுந்தருளிய அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமிக்கும், உதவி செய்த இந்து மக்கள் கட்சி தொண்டர்களுக்கும், ஊர் மக்களுக்கும் நன்றி. எல்லோருக்காகவும் பிரார்த்தனைகள் !

அடியேன் இராமாநுச தாஸன்
வீரராகவன் ஸம்பத்
Email: do@pracharam.in
Phone: +91-9655219245

 

Why did we go to Jaderi?

1. To understand ground reality.

2. To study the feasibility of conducting spiritual awareness training.

3. Identify local champions for our cause.

4. Craft a long-term, sustainable plan by getting volunteers from Kanchi, Cheyyar, and other nearby places to participate.

5. With the firm belief that association with Acharyas will remove adversity, we extended an invitation to Akkarakani Sri. U. Ve. Srinidhi Swamy to visit and bless the people there.

6. Distributed some Prasadam offered to the deity resident at the local temple, in an effort to inculcate Sattvik (positive) thoughts, suppress negative ones, and celebrate the occasion of Deepavali.

7. Gave story and activity books to children, to inculcate spiritual thoughts, awake them from within, instil a sense of service in them, and make them aware of how important their service of making Thiruman (nama katti) is.

What are the next steps?

1. Establish a direct supply-chain with these producers of Thiruman. This will ensure better margins for those making it. Producer-to-consumer relations will also help advance better awareness about the product, its benefits, and is a win-win for both. We are facilitating by coordinating shipment, and some logistics + fulfillment.

Update : You can give an order request here: http://pracharam.in/products We will start shipping from Aippasi Thirumoolam day (Nov 11 2018), the appearance day of the Acharya, Swami manavala Mamunikal.

2. Volunteer to conduct some spiritual awareness training/classes/sessions.

3. Pray for the well-being of the inhabitants of this quiet, and beautiful hamlet. They are dependant completely on the service that they offer for their livelihoods. Let us pray to the Lord Sriman Narayana to protect them, and preserve their values.

A humble request –

1. Please do not get carried away and make emotional pleas to help.

2. Do not offer to make donations, or provide free giveaways.

3. Take some time to read, assimilate, and verify whatever you read on the internet. (Including this post)

4. Initiative is always punished 🙂 and so, please do not indulge in publicly sparring against me for posting this!

I am open to discussion, debate, and discourse, but on private platforms. Should you have the need to know more, please reach out via the touch points below. I am happy clarify our position on any of the above items.

For his patience, and praiseworthy participation – our humble benedictions to Akkarakani Sri. U. Ve. Srinidhi Swamy. Our thanks to the members of Hindu Makkal Katchi, who were at the forefront of this effort. More than anything, we are grateful to the inhabitants of Jaderi who were very welcoming and hospitable.

Adiyen Ramanuja Dasan,

Veeraraghavan Sampath
Facebook: fb.com/raghavan245
Email: do@pracharam.in
Phone: +91-9655219245