Phone: +91 9655219245 | Free shipping for orders above Rs.500

குழந்தைகளுக்கு கதைகள் கேட்கப் பிடிக்கும். சிங்க முகத்தோடும் மனித உடலோடும் மஹாவிஷ்ணு அவதரித்த ப்ரகலாதன் நரசிம்மர் கதைகளை நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லியிருப்பீர்கள். குழந்தைகள் அந்தக்கதைகளிலிருந்து நிறைய கேள்வி கேட்பார்கள். வெள்ளந்தியான அந்தக் கேள்விகளில் உண்மை இருக்கும். பதில் சொல்லமுடியாமல் தயங்கியிருப்போம். அல்லது அப்போதைக்கு எதாவது சமாதானமாக பதிலைச் சொல்லியிருப்போம். ஆனால் குழந்தைகள் மனதில் அந்தக் கேள்விகள் அப்படியே இருக்கும். அவர்களின் கேள்விகளுக்கு நாம் முரண்பாடற்ற பொருத்தமான சரியான பதிலை, அவர்களுக்குப் புரியும் வண்ணம் சொல்வதும் முக்கியம். குழந்தைகள் அந்தக் கதைகளிலிருந்து என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்பதும் முக்கியம். அப்பொழுது தான் குழப்பம் தெளியும், சிந்தனை வளரும், பக்தி பெருகும். குழந்தைகளின் கேள்விகளுக்குச் சரியான பதிலை சொல்ல முடியாமல் உங்களில் பலரும் தவித்திருப்பீர்கள். அதற்காகவே எங்களின் சிறுவர் புத்தகங்களில் கேள்வி பதில்களுக்கு தனி இடம் ஒதுக்கியிருக்கிறோம். பெற்றோர்களுக்கு தனி குறிப்புகள் தந்திருக்கிறோம். வெறும் கதைப் புத்தகமாக இல்லாமல், Frequently Asked Questions (FAQ) section உண்டு. கதை சார்ந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்களுக்கு சில exercisesம் உண்டு. உதாரணத்திற்கு, ப்ரகலாதன் நரசிம்மர் கதையில் இருந்து சில கேள்விகள்.

1. மகாவிஷ்ணு ஹிரன்யகஷ்யபுவை வானத்திலிருந்தே அழித்திருக்கலாமே. ஏன் பூமிக்கு வந்தார் ?
2. விஷ்ணு ஏன் சிங்க முகத்தோடு தோன்றினார் ? வேறு எவ்வளவோ மிருகங்கள் உண்டே !
3. பெருமாள் கோயிலில் ஏன் சக்கரத்தாழ்வாருக்குப் பின்னால் எப்போதும் நரசிம்மர் வீற்றிருக்கிறார். என்ன தொடர்பு ?
4. நரசிம்மர் கோபமாகவே இருக்கிறார். பயமாக இருக்கிறது. அப்புறம் எப்படி அவர் நமக்கு நல்லது செய்வார். நாம் தவறு செய்தால் கோபித்துக்கொள்வாரோ ? தண்டிப்பாரோ ?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எங்கள் நரசிம்மர் புத்தகத்தில் பதில் தந்திருக்கிறோம். அந்தக் கதைகளின் மூலம் அவர்கள் என்ன கற்பார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு exercise.

பக்தியில் ஒன்பது விதங்கள் உண்டு – ஸ்ரவணம், கீர்த்தனம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறந்த பக்திமானான பிரகலாதன் அந்த வழிமுறைகளை எல்லாம் கதையில் எங்கே கையாண்டிருக்கிறான் என்று அவர்கள் கதையில் தேடி அதைக் குறிப்பிட வேண்டும். இது ஒரு activity. இதே போன்று, ஹிரன்யகஷ்யபுவின் வரங்களை எல்லாம் மீறி எப்படி நரசிம்மர் அவனை வதம் செய்தார் என்று ஒப்புமை பார்க்க வேண்டும் – a matching exercise.

இதைப் போன்று எங்களின் ஒவ்வொரு புத்தகத்திலும் சேர்க்க முயற்சித்திருக்கிறோம். Feedbackக்கு ஏற்ப மெருகேற்றி வருகிறோம். இந்த நரசிம்ம ஜெயந்திக்கு உங்களின் குழந்தைகளுக்கோ, உற்றார் உறவினர்களின் குழந்தைகளுக்கோ இந்தப் புத்தகத்தை நீங்கள் பரிசளிக்கலாம். பக்தியை விட சிறந்த செல்வம் ஏது ? அதை விட குழந்தைகளுக்கு சிறந்த பரிசு ஏது ? எல்லோருக்கும் நரசிம்ம ஜெயந்தி வாழ்த்துக்கள். ப்ரகலாதனைப் போல எல்லா குழந்தைகளும் நல்ல பக்தனாக வளர ஸ்ரீரங்கம் சிங்கர் கோயில் ஸ்ரீ காட்டழகிய சிங்கரை வேண்டுவோம்.

To order our “Lord Narasimha” English book online for your kids, https://pracharam.in/product/lord-narasimha/
To sponsor these books for Children in villages, https://pracharam.in/sponsor-books-for-pracharam/

Email : do@pracharam.in
Whatsapp : +91-9655219245

In the spirit of spreading the bhakthi, could you share this message with your friends/family 🙂 Jai Sri Narasimha !

Tags: